இந்திய சந்தையில் ரூ. 25 ஆயிரம் விலை குறைப்பில் ஐபோன்

உலகத்தினை ஆட்டி படைக்கும் கையடக்க தொலைப்பேசி நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

ஐபோன் 12 ப்ரோ

இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு இந்தியாவின் இணையத்தளமான அமேசான் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐபோன் 12 ப்ரோ மாடல் கைப்பேசிக்கு விலை ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பு கிராபைட், கோல்டு, பசிபிக் புளூ மற்றும் சில்வர் என அனைத்து நிறங்கள் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் ஐபோன் 12 ப்ரோ

தற்போது இந்த மாடல் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஐபோன் 12 ப்ரோ மாடல் ரூ. 1,19,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 94,900 என அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 99,900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1,07,900 என்றும் மாற்றப்பட்டு இருக்கின்றன. ஐபோனில் 12 உள்ள அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ஓ.எல்.இ.டி. தொடுத்திரை, ஏ14 பயோனிக் சிப்செட், 12 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 12 எம்.பி. ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Share
%d bloggers like this: