இனிமேல் தொலைக்காட்சியில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கலாம்!

ஜப்பான் நாட்டை சேர்ந்த பேராசிரியரான ஹோமி மியஷிடா தொலைக்காட்சி திரையில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அறிமுகம் செய்துள்ளார்.

Tasty TV என்றழைக்கப்படும் குறிப்பிட்ட தொலைக்காட்சியின் திரை மீது Hygienic Film என்ற ஒருவித பிளாஸ்டிக்கினால் ஆன படச்சுருள் விரிக்கப்படும், இதன் மீது 10 விதமான சுவை நிறைந்த கலவை தெளிக்கப்படும்.

இதன் மூலம் உணவுகளை சுவைக்கலாம் என பேராசிரியர் ஹோமி மியஷிடா தெரிவித்துள்ளார், மேலும் வீட்டில் இருந்தபடியே உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமாக கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் மக்கள் வெளி உலகுடன் தொடர்பு கொள்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை வணிக ரீதியில் உற்பத்தி செய்ய தொடங்கினால், 875 அமெரிக்க டொலர்கள் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி சுவை சார்ந்து பேராசிரியர் ஹோமி மியஷிடா பல சாதனங்களை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share
%d bloggers like this: