வைரலாகும் ஆப்பிள் வாட்ச் விளம்பரம்

ஆப்பிள் நிறுவனம் 911 தலைப்பில் ஆப்பிள் கைக்கடிகார வகைகளுக்கான புதிய விளம்பர வீடியோவை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விளம்பர வீடியோ ஆப்பிள் கைக்கடிகாரம் அதன் பயனர்களின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்டுள்ளதை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறமை விஷேட அம்சமாகும்.

வீடியோவில் அமாண்டா, ஜேசன் மற்றும் ஜிம் என மூன்று பேர் ஆப்பிள் வாட்ச் மாடலில் இருந்து 911 அழைத்து உதவி கோர முடிகிறது. முதல் சம்பவத்தில் பெண் பயணித்து கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கும் போது ஆப்பிள் வாட்ச் உதவுகிறதை போன்று வடிவமைத்துள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில் சூறாவளியில் சிக்குண்ட நபர் கடலுக்குள் தூக்கி வீசப்படுகிறதை காண்பிக்கின்றனர். மேலும் சுமார் 21 அடி உயரத்தில் இருந்து விவசாயி ஒருவர் கீழே விழுந்து காலை உடைத்து கொள்கிறார். வீடியோ நிறைவடையும் போது மூன்று பேரும் நிமிடங்களில் காப்பாற்றப்படுகின்றனமை காண்பிக்கப்படுகின்றது.

அதன்படி ஆப்பிள் கைக்கடிகாரத்தினை வாங்கினால், ஆபத்து நேரத்தில் அது உங்களின் உயிரை காப்பாற்றும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றி இருக்கும் சம்பவங்கள் உலகளவில் பலமுறை அரங்கேறி இருக்கின்றமை யாவரும் அறிந்த உண்மையே.

Share
%d bloggers like this: