ஏற்றுமதியில் 124 சதவீத வளர்ச்சி பதிவு செய்த மாருதி சுசுகி

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் 2021 மாதத்தில் 1,53,149 கார்களை விற்பனை செய்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் 1,26,031 கார்களும் வெளிநாடுகளுக்கு 22,280 கார்களையும் அந்நிறுவனம் ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகியின் உள்நாட்டு சந்தையில் கார்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மாருதி சுசுகியின் வாடிக்கையாளர்கள் வாகனங்களான மினி மற்றும் காம்பேக்ட் தரத்தில்- ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, ஸ்விப்ட், டிசையர், இக்னிஸ் மற்றும் பலேனோ போன்ற வகையில் 69,345 கார்கள் விற்பனையாகியுள்ளது.

சியாஸ் மிட்-சைஸ் செடான் மாடல் 1,204 கார்களும், யுடிலிட்டி மற்றும் வேன் பிரிவில்- ஜிப்சி, எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் மற்றும் ஈகோ போன்ற வகைகளில் 36,147 கார்களும் மக்களுக்கு விற்பனையாகி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தள்ளதுஃ

Share
%d bloggers like this: