65 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 65,197 மோட்டார் சைக்கிள்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 வருடத்தின் டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 65,492 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாத விற்பனையில் ராயல் என்பீல்டு சிறிதளவு சரிவை சந்தித்துள்ளது.

வருட ஒப்பிட்ட அடிப்படையில் சரிவை சந்தித்து இருந்தாலும், மாதாந்திர விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 44,133 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி டிசம்பர் விற்பனையில் ராயல் என்பீல்டு 45 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு சந்தை விற்பனையில் மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியிலும் ராயல் என்பீல்டு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை விஷேட அம்சமாக உள்ளது.

டிசம்பர் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 2021 டிசம்பரில் ராயல் என்பீல்டு நிறுவன வாகனங்கள் ஏற்றுமதி 144.13 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பரில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 8552 மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்திருந்தது. 2020 டிசம்பரில் மொத்தம் 3503 மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்து இருந்தது.

Share
%d bloggers like this: