அதிவேக செயல்திறன் கொண்ட ரியல்மி புக் லேப்டாப்

ரியல்மி நிறுவனத்தினால் புதிய லேப்டாப்பை வருகின்ற ஏப்ரம் மாதம் வெளியிடவுள்ளது. இந்த மடிக்கணினி ’புக் பிரைம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மடிக்கணினி சீனாவில் ஜனவரியில் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் புதிய வடிவமைப்பாக இருக்கும் என அதன் பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மடிக்கணினியில் 11th Gen Intel Core H-series பிராசஸர் இடம்பெற்றிருக்கும் என பயன்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி தகவல் களஞ்சியம் இருக்கும் என்றும், இந்த லேப்டாப்பின் விலை சராசரியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.55,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி புக் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள 16 ஜிபி LPDDR4x dual-channel ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2கே ரெஷலியூஷன் கொண்ட 14 இன்ச் ஐபிஎஸ் திரையும், 100 சதவித sRGB colour gamut, 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோவை கொண்டுள்ளது.

இதில் 11th Gen Intel Core i5-11320H processor, இன்டெல் ஷார்ப் எக்ஸ் கிராபிக்ஸ் திறன் வழங்கப்பட்டிருந்தது. இந்த மடிக்கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளம், 54Whr பேட்டரி, 65W அதிவேக சார்ஜிங் டெக்னாலஜி ஆகியவை வழங்கப்பட்டிருந்ததாக அறிவித்துள்ளது.

இந்த லேப்டாப்பில் உள்ள வேபர் சேம்பர் கூலிங் அமைப்பு, டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம், டூயல் மைக்குகள், 720 ஹெச்.டி வெப் கேம், பேக்லிட் கீபோர்ட், ஃபிங்கர் பிரிண்ட் பட்டன் ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.

இதே அம்சங்கள் தான் புதிய ரியல்மி புக் பிரைமில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
%d bloggers like this: