மார்ச்சில் Apple வெளியிடவுள்ள புதிய சாதனங்களை!

அப்பிள் நிறுவனம் வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் iPhone SE 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ஆம் திகதி நடைபெறும் என அப்பிள் சாதன பயனாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி, அப்பிள் நிறுவனத்தின் 5 ஆவது தலைமுறை புதிய iPod Air 5, M2 silicon processor-உடன் 13 இன்ச் MacBook Pro, 27 இன்ச் iMac Pro, Mac mini மற்றும் iPhone SE 3 ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.

iPhone SE 3 இல் ஐபோன் 13 சீரிஸில் இடம்பெற்றுள்ள 5nm A15 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெறலாம் என அதன் பயனாளர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4.7 இன்ச் எல்.சி.டி தொடுத்திரை, 12 மெகா பிக்ஸல் கேமரா சென்சார் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் இந்திய மதிப்பில் படி ரூ.45,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த புதிய iPhone அறிமுகப்படுத்தலினால், OnePlus 9 RT மற்றும் Samsung Galaxy S21 FE ஆகிய ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

Share
%d bloggers like this: