வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி

உலகத்தில் உள்ள மக்கள் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் செயலி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த செயலியின் எளிமையான அம்சங்கள் வாட்ஸ்அப்பை அனைத்தும் விதமான மக்களும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் அனுப்பும் வசதியும் உள்ளது.

வாட்ஸ்அப் செயலில் இதுவரையில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறித்த புகைப்பத்தின் தரத்தினை தானாகவே குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை நாம் வாட்ஸ்எப் டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும்.

அவ்வாறு நாம் புகைப்படத்தினை அனுப்பும் போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும். அதை தரவிறக்கம் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும். இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அம்சம் அறிமுகத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்ப இயலும், இதன்மூலம் குறித்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.

குறித்த புதிய அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் லிங்க்கை பகிரும் போதும் இந்த ப்ரிவீவ் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அறிமுக செய்யப்பட்டுள்ளது.

Share
%d bloggers like this: