இந்தியாவில் ஒரே மாதத்தில் 18.58 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

உலகளாவிய ரீதியில் பலரும் பயன்படுத்தி வருகின்ற வாட்ஸ்அப்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. குறித்த கணக்குகள் அனைத்தும் இந்தியாவில் மட்டும் முடக்கப்பட்டுள்ள எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்குகள் அனைத்தும் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை மீறியுள்ளமையினால் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக அளவில் உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்கள் மத்தியில் பகிர்வு செய்தது, அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோல உங்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தால், வாட்ஸ்அப் சப்போர்ட்டை சேவையினை தொடர்புகொண்டு அதுகுறித்து தெரிவிக்கலாம். அதன் பின்னர் உங்கள் கணக்கு சரி செய்யப்பட்டு பின் மீண்டும் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.

Share
%d bloggers like this: