போரினால் பெரும் சேதம்: உக்ரைனில் இணைய சேவை வழங்க எலான் மஸ்க் செய்த அதிரடி செயல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் 7 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷ்யா இராணுவம் முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியமை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தனர். இதனால் அந்நாட்டின் இணைய சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் போரில் பெரும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்ய முன் வந்துள்ளார். இதன்படி அவர்களின் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழியாக வழங்கப்படும் “ஸ்டார் லிங்க்” இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார்.

ரஷ்ய படைகள் ஆக்கிரமிக்க முடியாத உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி, அவற்றை உக்ரைனுக்கு வழங்குவதே தனது திட்டம் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் மேலும் தாக்குதல் நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவையை நிறுத்த முடியாது என்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டு இந்த இணைய சேவை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Share
%d bloggers like this: