இன்ஸ்டாகிராமில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் பழைய அம்சம்

இன்ஸ்டாகிராம் செயலியானது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக திகழ்கின்றது. இதில் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உலக மக்களை வெகுவாக ஈர்க்கக் கூடியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் செயலியில் தமது பயனர்கள் விரும்பும் வகையில் புதிய புதிய அம்சங்கள் அடிக்கடி சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்து, பிறகு அதிலிருந்து நீக்கப்பட்ட அம்சம் ஒன்று தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலின் படி மீண்டும் ஹோம்ஃபீடை (Home Feed) பயனர்கள் இனி தாங்கள் விரும்பும் வகையில் மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம்ஃபீடில் Following, Favourites என்ற இரண்டு பிரிவுகள் வழங்கப்படும். பயனர்கள் பாலோயிங் என்ற ஹோம்ஃபீடை தேர்ந்தெடுத்தால், அவர்கள் பின் தொடரும் அனைத்து இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்தும், அவர்கள் அதிகம் பார்க்கும் தகவல்களின் அடிப்படையில் பரிந்துரைகளும் பதிவுகளாக ஹோம் ஃபீடில் அவர்களுக்கு காட்டப்படும்.

இதுவே குறித்த பயனர்கள் ஃபேவரைட்ஸ் என்ற ஹோம்ஃபீட்டை தேர்ந்தெடுத்தால், தங்களுக்கு பிடித்த கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளை மட்டும் பார்த்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளக்கூடிய வசதியினை அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். அந்த 50 கணக்குகளில் பதிவிடப்படும் தகவல்கள் மட்டும் ஃபேவரைட் ஆப்ஷனில் காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
%d bloggers like this: