சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகள்- காரணம் இது தான்!

உலகளவில் 10 இல் 6 குழந்தைகள் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாக சர்ப்ஷார்க் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அதிர்ச்சி தகவலினை தெரிவித்துள்ளது. இதில் உள்ள குழந்தைகள் 8 முதல் 12 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல் கடந்த 2020 ஆம் ஆண்டு 144 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகள் இணையத்தள வகுப்புகளில் பங்கேற்பது தான் என கூறப்படுகிறது.

இரண்டில் ஒரு குழந்தைகள் சைபர் வன்முறைக்கு ஆளாகி வருகின்றதாகவும், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிஷ்ஷிங் அல்லது ஹாக்கிங்கிற்கு ஆளாவதாக அந்நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1.2 கோடி குழந்தைகள் கடந்த மூன்று வருடங்களில் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

குழந்தைகளுக்கு இணையம் குறித்த கல்வியறிவை தரவேண்டிய கட்டாயத்தில் சமூகம் மற்றும் குடும்பத்தினர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருமானம் வரும் நாடுகளை விட ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள குழந்தைகள் இணையத்தில் வரும் பாதிப்புகளை சமாளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளமை முக்கிய கருத்தாக அமைந்துள்ளது.

குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல் மூலம் ரூ.5.03 கோடி அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Share
%d bloggers like this: