பணம் அனுப்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி

உலகளவில் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் பணம் பரிவர்த்தனை சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் திகழ்ந்து வருகின்றமை யாவரும் அறிந்த ஒன்றாகும். இருப்பினும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ்ஆப்பை 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் என்.பி.சி.ஐ அமைப்பு விரிவு செய்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பதாக 4 கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ்ஆப் பே வசதியினை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது கூடுதலாக 6 கோடி பயனர்களுக்கு விரிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தமையால் பலரும் இந்த வசதியிற்காக காந்திருந்து வந்தனர். கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 4 கோடியாக உயர்ந்த நிலையில் தற்போது அது 10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் அதன் பயனாளிகள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். மேலும் குறித்த வசதியினை விரைவில் 50 கோடியாக மாற்றும் அளவிற்கு வாட்ஸ்ஆப் சேவையை விரிவுப்படுத்துவோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
%d bloggers like this: