கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி

இன்று உலகளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகின்ற சமூக வலைதள செயலியாக வாட்ஸ்-அப் திகழ்ந்து வருகின்றது.

மெட்டா நிறுவனத்தின் குறித்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை அதன் பயனர்கள் மேற்கொள்ளலாம். தமக்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவை அனுப்பிக் கொள்வதுண்டு.

இவ்வாறு வசதிகள் இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி அதிகளவு கொண்ட ஃபைல்களை அனுப்பவதினை வழமையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஆவணங்களை அனுப்ப முடியும் அளவிற்கு வாட்ஸ அப் செயலி மேம்படுத்தப்படுகிறது.

மேலும் உலகளவில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் இடம்பெற்ற உள்ள கூடுதல் அப்டேட்டுகளை பார்க்கலாம்!!

அறிமுகம் இல்லாதவரின் கையடக்கத்தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமலேயே அந்த நபருக்கு நேரடியாக மெசேஜ் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகிறது.

தமது ரியாக்சனை வெளிப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி அறிமுகமாகியும் உள்ளது.

வாட்ஸ் அப் குழுவில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, குறித்த குழுவின் அட்மின் நீக்குவதற்கான வசதி அறிமுகமாகிறது.

வாட்ஸ் அப் குழு வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதியும் அறிமுகமாகவுள்ளமையும் விஷேட அம்சமாகும்.

Share
%d bloggers like this: