உங்கள் பாஸ்வேர்டை திருடும் செயலி!- எச்சரிக்கை

கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரத்திற்கும் அதிகமான செயலிகள் பாவணையாளர்களுக்கு பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன. இதில் பெரும்பான்மையான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் பலரும் அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இத்தகைய செயலிகளால் நமக்கான பாதுகாப்பு பறிபோகும் அபாயமுள்ளதை நாம் மறந்து விடுகின்றோம்.

குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனத்தினால் craftsart cartoon photo tools என்ற செயலி குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரித்துள்ளது. நம்முடைய புகைப்படத்தினை குறித்த செயலியில் பதிவேற்றி புகைப்படத்தை கார்டூனாக மற்றித்தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு மூலம் உள்நுழைவு செய்ய வேண்டும்.

ஆனால் குறித்த செயலி நமது கணக்கை பேஸ்புக்கிற்குள் லாக் இன் செய்யாமல் அந்த தகவல்களை மற்றொரு சர்வருக்கு அனுப்பி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாம் கார்டூனாக மாற்றுவதற்கு அப்லோட் செய்யும் புகைப்படங்களும் திருடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 1 லட்சம் பேர் வரை தரவிறக்கம் செய்துள்ள இந்த செயலி குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
%d bloggers like this: